உ/த தகவல் தொழில்நுட்ப பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

உயர்தரத்தின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 02-10-2019 | 12:04 PM
Colombo (News 1st) 2019 உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பரீட்சையானது, 656 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடவை பரீட்சையில் 1 86 363 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில், பரீட்சை நிலையங்களுக்கு தொடர்ச்சியாக மின்விநியோகத்தை வழங்கவும் இணையத்தள வசதியை வழங்குவதற்கும் அந்தந்த பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை அதிபர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.