by Staff Writer 02-10-2019 | 11:35 AM
Colombo (News 1st) வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவியிருக்கலாம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையானது Wonson துறைமுகத்திலிருந்து கிட்டத்தட்ட 450 கிலோமீற்றர் தூரத்திலிருந்து ஏவப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வட கொரியா அடையாளந்தெரியாத எறிகணையை ஜப்பானிய கடற்பரப்பில் ஏவி பரீட்சித்துள்ளதாக தென் கொரிய இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்த வாரத்தில் மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்து அடுத்த நாளில் வட கொரியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தடை செய்யும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை வட கொரியா மீறியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.