பீஹாரில் வௌ்ள அனர்த்தங்களால் 42 பேர் உயிரிழப்பு

பீஹாரில் வௌ்ள அனர்த்தங்களால் 42 பேர் உயிரிழப்பு

பீஹாரில் வௌ்ள அனர்த்தங்களால் 42 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2019 | 7:20 pm

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்னா, போஜ்பூர், பகல்பூர், ககாரியா உள்ளிட்ட இடங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 27 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை பெய்த கடும் மழையினால் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கினால் சுமார் 17 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் வடிந்தோட ஆரம்பித்துள்ளதுடன், மீட்புப் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

நீர் மட்டம் அதிகமாகக் காணப்பட்ட இடங்களிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 31 கர்ப்பிணித் தாய்மாரும் 361 நோயாளர்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில உப மின் நிலையங்கள் செயலிழந்தமையால், கடந்த சில நாட்களாக அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்