தீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி

தீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி

தீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2019 | 7:48 pm

Colombo (News 1st) கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றின் போது தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய எஸ்.ராமராஜூக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ராமராஜ் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கண்டி – யட்டிநுவர பகுதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி திடீரென தீப்பற்றியது.

தனது உயிரை துச்சமாகக் கருதி செயற்பட்ட இவர், மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பாதுகாப்பாக வெளியேற்ற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

ஆபரணங்களுக்கு தங்கமுலாம் பூசும் தொழில் செய்யும் இவரின் வீடு தீக்கிரையானதால், அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

எனவே இவரின் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட குடும்பத் தேவைகளுக்காக ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்