அதாவுத செனவிரத்ன, W.B.ஏக்கநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

அதாவுத செனவிரத்ன, W.B.ஏக்கநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2019 | 3:22 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுத செனவிரத்ன மற்றும் W.B.ஏக்கநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவர்கள் இருவரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டனர்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மிகச்சிறிய அளவான பலனையே ஏழை மக்கள் அனுபவிப்பதாக இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கால வரையறையுடனான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

நாட்டு மக்களின் துன்பியல் வாழ்கையை தினந்தோறும் காண்கின்ற போது, செல்வாக்கான அரசியல் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்