பிரதமருடன் கலந்துரையாடியது என்ன: சம்பந்தன் விளக்கம்
by Staff Writer 01-10-2019 | 10:35 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியூஸ்ஃபெஸ்டிற்கு இன்று கருத்து தெரிவித்தார்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் எல்லோருடைய கருத்தையும் கேட்டு, ஆலோசித்து முடிவு எடுப்பதாக இதன்போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் பின்வருமாறு கருத்துக் கூறினார்,
பிரதமரையும் சஜித் பிரேமதாச அவர்களையும் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம ஆகிய அமைச்சர்களையும் நேற்று நாங்கள் சந்தித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக அவர்கள் சில கருத்துக்களை எமக்குக் கூறினார்கள். எமது நிலைப்பாட்டைப் பற்றி அவர்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்தோம். மேலும், சந்தித்துப் பேசுவது என்று முடிவு எடுத்துள்ளோம்.
மேலும், இந்த சந்திப்பின் போது இறுதியான தீர்மானம் எடுக்கும் சூழல் இருக்கவில்லை எனவும் ஒருமித்த, பிளவுபடாத, பிரிக்கப்படாத, பிரிபட முடியாத நாட்டிற்குள் அதியுயர்மட்ட அதிகாரப்பகிர்வு என்னவிதமாக அமைய வேண்டும், என்னவிதமாக அமைந்தால் அந்தக் குறிக்கோளை அடையலாம் என்ற பல விடயங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் இரா.சம்பந்தன் கூறினார்.
மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...