சர்வதேச சிறுவர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 6:59 am

Colombo (News 1st) சர்வதேச சிறுவர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகின்றது.

‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால், இன்று 1 3704 பேர் வரை குழந்தைத் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.

அவர்களில் 87 854 பேர் சிறுவர் தொழிலாளர்களாகவே வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தோட்டப்புறங்களைச் சேர்ந்த 2321 சிறுவர்களும் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளனர்.

34 494 சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 65 210 சிறுவர்கள் ஆண் சிறுவர்கள் ஆவர்.

சிறுவர் தினம் போன்றே இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.

முதியோர்களுக்கு உரிய இடத்தை வழங்கும் நாளை எனும் தொனிப்பொருளில் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

தற்போது நாட்டில் 1 30 000 முதியோர் வாழ்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 100 வயதைத் தாண்டிய 650 பேர் இலங்கையில் வாழ்கின்றனர்.

முதியோர் இல்லங்களில் அன்றி வீடுகளில் வசிக்கும் முதியோரின் எண்ணிக்கை 9 000 இற்கும் அதிகம் என தேசிய முதியோர்களுக்கான செயலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்