கணினி தொழில்நுட்பக் கோளாறால் தபால் சேவையில் தாமதம்

கணினி தொழில்நுட்பக் கோளாறால் தபால் சேவையில் தாமதம்

கணினி தொழில்நுட்பக் கோளாறால் தபால் சேவையில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 11:14 am

Colombo (News 1st) கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து சேவைகளும் தாமதமடைந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 653 தபால் நிலையங்கள் மற்றும் 3400 உப தபால் நிலையங்களிலும் கணினி மூலமாக முன்னெடுக்கப்படும் அனைத்துத் தபால் சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த வியடம் தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீமிடம் வினவியபோது, இந்தக் கணினி தொழில்நுட்பப் பிரச்சினையை இன்றுடன் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்