இலங்கையில் தரையிறக்கப்பட்ட அமெரிக்க சரக்கு விமானம் அயர்லாந்து பயணம்

இலங்கையில் தரையிறக்கப்பட்ட அமெரிக்க சரக்கு விமானம் அயர்லாந்து பயணம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 9:25 pm

Colombo (News 1st) இலங்கையில் தரையிறக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் Western Global நிறுவனத்தின் சரக்கு விமானம் துபாய் ஊடாக அயர்லாந்து நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானம் தொடர்பிலான தகவல்களை ஆராய்வதற்காக சில தரப்பினருடன் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்பை ஏற்படுத்திய போதிலும், அவர்கள் உரிய தெளிவூட்டலை வழங்கவில்லை.

அமெரிக்காவின் Western Global விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்த விமானம் தொடர்பில் சிவில் விமான அதிகாரிகளிடம் வினவியபோது, தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் வெளிநாடு சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் பதிலளித்தனர்.

இது தொடர்பில் சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வினவுவதற்கு முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை.

இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட அல்லது எடுத்துச்செல்லப்பட்ட பொருட்கள் என்ன?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்