இறக்குமதியாகும் வெங்காயத்தின் தீர்வை வரியை 39 ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

இறக்குமதியாகும் வெங்காயத்தின் தீர்வை வரியை 39 ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

இறக்குமதியாகும் வெங்காயத்தின் தீர்வை வரியை 39 ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 4:30 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கான தீர்வை வரியை 39 ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நுகர்வோர் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதுவரை காலம் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபா வரி அறவிடப்பட்டது.

இதேவேளை, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரிய வெங்காய மொத்த விற்பனை விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். அதற்கமைய, ஒரு கிலோகிராம் வெங்காயம் 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

10 வருடங்களின் பின்னர் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் மிக அதிகமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்