அவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்

அவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்

அவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2019 | 11:05 am

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் (Scott Morrison) டொபர்ட் முல்லர் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி கோரியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டொபர்ட் முல்லரின் விசாரணைகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆதாரங்களை கண்டறிய உதவுமாறு ட்ரம்ப், ஸ்கொட் மொரிசனிடம் கோரியுள்ளதாக அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உதவுவதற்கு ஸ்கொட் மொரிசன் இணக்கம் தெரிவித்ததாகவும் அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.

மற்றுமொரு வௌிநாட்டுத் தலைவருடனான தொலைபேசி அழைப்பு குறித்து ட்ரம்புக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவலும் வௌியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்