பீஹாரில் கனமழை; நூற்றுக்கும் அதிகமானோர் பலி

பீஹாரில் தொடரும் கனமழை; நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

by Staff Writer 30-09-2019 | 6:09 PM
Colombo (News 1st) இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஹார் மாநிலம் பாத்னாவில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதுடன் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வீதிப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வீடுகள் மட்டுமின்றி மருத்துவமனைகள், ரயில் நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் பீஹார் முதலமைச்சர், வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, தலைநகர் பாத்னாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.