ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2019 | 4:54 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் காலம், எதிர்வரும் 4ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் (30) நிறைவடையவிருந்தது.

கடந்த வாரம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, விண்ணப்பங்களை ஏற்கும் காலத்தை நீடிப்பதற்குத் தீர்மானித்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்