பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

by Staff Writer 29-09-2019 | 7:20 AM
Colombo (News 1st) பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை நேற்றைய தினம் 195 ரூபாவாகக் காணப்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் பெரிய வெங்காயத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 170 ரூபாவாக காணப்பட்டது. மாத்தளை மாவட்டத்தில் 600 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கையிடப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.