ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் பூதவுடல் நல்லடக்கம்

ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் பூதவுடல் நல்லடக்கம்

ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் பூதவுடல் நல்லடக்கம்

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 8:18 am

Colombo (News 1st) ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் (Robert Mugabe) பூதவுடல் அவரின் சொந்தக் கிராமமான குடாமாவில் (Kutama) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக ரொபர்ட் முகாபே தனது 95ஆவது வயதில் கடந்த 6ஆம் திகதி சிங்கப்பூர் வைத்தியசாலையில் இயற்கை எய்தினார்.

அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் நேற்றைய தினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன.

இறுதிக் கிரியைகளின்போது பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டிருந்த
போதிலும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவொரு சிரேஷ்ட தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்