முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்

எழுத்தாளர் Fazlullah Mubarak

29 Sep, 2019 | 4:24 pm

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட 30 சிவில் அமைப்புக்கள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு சுகததாச உள்ளக அரங்கில்  இடம்பெற்றது.

நாட்டைப் பாதுகாப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் முன்னாள் இராணுவத்தளபதி உரையாற்றினார்.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி களமிறங்குகின்றார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் முறையான விதம் தொடர்பில் தனது திட்டமிடல்களை முன்னாள் இராணுவத் தளபதி இதன்போது தெரியப்படுத்தினார்.

அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை அடிப்படையாக வைத்து நாட்டை முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக இதன்போது அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்