கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது

கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது

கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் நாட்டு பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 10:12 am

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரேஸில் நாட்டு பெண்ணின் வயிற்றிலிருந்து கொக்கெய்ன் அடங்கிய 52 வில்லைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டோஹாவில் இருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த குறித்த பெண், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

50 வயதான சந்தேகநபர் இன்று (29) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்