கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2019 | 10:04 am

Colombo (News 1st) மட்டக்களப்பு – கரடியனாறு – கித்துள் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கித்துள் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 பேரடங்கிய குழுவொன்று நேற்று மாலை வேளை, வேட்டையாடுவதற்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துவக்கு தவறுதலாக இயங்கியதில் சிறுவன் காயமடைந்துள்ளார்.

சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வேட்டையாடுவதற்கு சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடினாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்