by Bella Dalima 28-09-2019 | 5:37 PM
Colombo (News 1st) புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள் காட்டி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
''யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்கிற வரியை மேற்கோள் காட்டி நாட்டின் வளர்ச்சிக்காகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் போராட அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்பதை புறநானூற்றுப் பாடல் வரிகள் மூலம் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக தாம் தீவிரத்தன்மையுடனும் ஆவேசத்துடனும் குரல் கொடுப்பதாகவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அத்துடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நல்லிணக்கம் மற்றும் அமைதி என்ற செய்தியை உலகுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.