வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி டொலராக பதிவு

ஜூலையில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவு

by Staff Writer 28-09-2019 | 4:33 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் ஜூலை மாத நிறைவில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5 மாத காலப்பகுதியில் இறக்குமதி நடவடிக்கைகளை உள்வாங்குவதற்கு இது போதுமானது எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கமைவாக, இறக்குமதி குறைவடைந்ததனால் வர்த்தகத்தின் துண்டுவிழும் தொகையை சிறப்பான மட்டத்தில் முன்னெடுக்க முடிந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.