ஜூலையில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவு

ஜூலையில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவு

ஜூலையில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 4:33 pm

Colombo (News 1st) இந்த வருடத்தின் ஜூலை மாத நிறைவில் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்பு 830 கோடி அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 5 மாத காலப்பகுதியில் இறக்குமதி நடவடிக்கைகளை உள்வாங்குவதற்கு இது போதுமானது எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதற்கமைவாக, இறக்குமதி குறைவடைந்ததனால் வர்த்தகத்தின் துண்டுவிழும் தொகையை சிறப்பான மட்டத்தில் முன்னெடுக்க முடிந்ததாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்