அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக தெரிவித்து வண்ணாத்திவில்லு மக்கள் முறைப்பாடு

அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக தெரிவித்து வண்ணாத்திவில்லு மக்கள் முறைப்பாடு

அறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக தெரிவித்து வண்ணாத்திவில்லு மக்கள் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 8:36 pm

Colombo (News 1st) புத்தளம் – அறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக தெரிவித்து வண்ணாத்திவில்லு மக்கள் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அறுவைக்காடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

குப்பைகள் எவ்வித சுழற்சி முறையும் இன்றி கொட்டப்படுவதினால் அண்மித்த பகுதிகளில் வாழும் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் கூறினர்.

குப்பைகளால் சூழல் மாசடைவதாக தெரிவித்து சேரக்குழி மற்றும் கரைதீவு மக்கள் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

எனினும், ஆரம்பத்தில் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுப்பு தெரிவித்ததாகவும் அதன் பின்னரே ஏற்றுக்கொண்டதாகவும் வண்ணாத்திவில்லு பங்குத்தந்தை தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்