அரசியல் கட்சி பிரதிநிதிகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் விசேட கலந்துரையாடல்

அரசியல் கட்சி பிரதிநிதிகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் விசேட கலந்துரையாடல்

அரசியல் கட்சி பிரதிநிதிகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2019 | 3:59 pm

Colombo (News 1st) அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் எதிர்வரும் புதன்கிழமை (02) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள வேட்பு மனு தாக்கல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் புதன்கிழமை (02) முற்பகல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்