SOFA மற்றும் MCC ஒப்பந்தங்கள் தொடர்பில் பரிசீலிக்கத் தயார்: பொதுஜன பெரமுன

by Bella Dalima 27-09-2019 | 7:16 PM
Colombo (News 1st) அமெரிக்காவுடன் SOFA மற்றும் Millennium Challenge Corporation ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பில் தமது அரசாங்கத்தின் கீழ் பரிசீலிக்கத் தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இரு நாடுகளுக்கும் சமமான அளவில் நன்மை உள்ள போது தான் நாங்கள் சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம். முதலில் அந்த ஒப்பந்தம் தொடர்பில் நாங்கள் அறிந்துகொள்வது அவசியமானது. அதனால் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களை சந்தித்தேன். இந்த வர்த்தக உடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயப்பதாக அமையும் என தெரிவித்தார்கள். நான் அந்த நாடுகளின் பெயரைக் குறிப்பிடவில்லை.