by Staff Writer 27-09-2019 | 7:03 PM
Colombo (News 1st) பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களிலிருந்து சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எயார் இந்தியாவின் இணை நிறுவனமான அலையன்ஸ் எயாரின் முதலாவது சர்வதேச விமான மார்க்கமாக இது அமையவுள்ளது.
குறித்த சேவையை ஆரம்பிப்பதற்கான கள ஆய்வினை விமான நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டிருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.