காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு ரீதியில் மக்கள் சக்தி ஆய்வு

by Staff Writer 27-09-2019 | 8:46 PM
Colombo (News 1st) காட்டு யானை பிரச்சினையை நிவர்த்திக்கும் நோக்கில் மக்கள் சக்தி மற்றுமொரு மக்கள் சேவையை இன்று ஆரம்பித்தது. ஹம்பாந்தோட்டை - சூரியவெவ, அந்தரவெவ பகுதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை நகர் மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு ரீதியிலான ஆய்வு இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் மக்கள் சக்தியுடன், வன ஜீவராசிகள் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்துள்ளன.