ஜனாதிபதி வேட்பாளருக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை: பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி வேட்பாளருக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை: பாட்டலி சம்பிக்க ரணவக்க

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2019 | 7:49 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தமது கட்சியின் சார்பில் தாம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கேகாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் கலந்துகொண்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்