சட்டவிரோதமாக ஜோர்தானிலுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு

சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியுள்ள வௌிநாட்டு பணியாளர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது

by Bella Dalima 27-09-2019 | 4:47 PM
சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியுள்ள வௌிநாட்டு பணியாளர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, விசா இன்றி ஜோர்தானில் தங்கியுள்ள பணியாளர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாது அங்கிருந்து வௌியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் நாடு திரும்ப முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.