இஸ்ரேலிய பிரதமரிடம் அந்நாட்டு ஜனாதிபதி கோரிக்கை

புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 26-09-2019 | 8:44 AM
Colombo (News 1st) நாட்டின் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் அந்நாட்டு ஜனாதிபதி ரியூவென் ரிவ்லின் (Reuven Rivlin) கேட்டுக் கொண்டுள்ளார். பெஞ்சமின்நெதன்யாஹு மற்றும் எதிர்கட்சி வேட்பாளர் பென்னி கன்ட்ஸ் (Benny Gantz) ஆகியோர், கூட்டணி அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்காததை அடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 120 ஆசனங்களில் பென்னி கன்ட்ஸ் 33 ஆசனங்களையும் பெஞ்சமின் நெதன்யாஹு 32 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தனர். ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கமைய, புதிய அரசாங்கததை நிறுவுவதற்கு பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. இதேவேளை, வருடத்தில் மூன்றாவது தடவையாகவும் பொதுத் தேர்தலொன்று நடைபெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என இஸ்ரேலிய ஜனாதிபதி ரியூவென் ரிவ்லின் தெரிவித்துள்ளார்.