இலங்கை இராணுவத்தினரை திருப்பி அனுப்ப ஐநா தீர்மானம்

அமைதி காக்கும் படையிலுள்ள இலங்கை இராணுவத்தினரை திருப்பி அனுப்ப ஐ.நா தீர்மானம்: நாளை விசேட கலந்துரையாடல்

by Staff Writer 26-09-2019 | 3:49 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையிலும் ஏனைய இராணுவப் பிரிவுகளிலும் கடமையாற்றும் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் வௌியிட்ட அறிவிப்பு தொடர்பில் நாளை (27) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இந்த குழுவினர் நியூயோர்க்கிற்கு சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் வௌியிட்ட அறிவிப்பு தொடர்பில், அமைதி காக்கும் பிரிவின் பிரதி செயலாளருடன் நாளைய தினம் கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அமைதிகாக்கும் படையிலுள்ள இலங்கை இராணுவத்தினரை திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் அறிவித்துள்ளார்.