பருவநிலை மாற்றத்தால் கடல்கள் அழிவதாக ஐ.நா. எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் கடல்கள் அழிவதாக ஐ.நா. எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் கடல்கள் அழிவதாக ஐ.நா. எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2019 | 2:36 pm

Colombo (News 1st) பருவநிலை மாற்றம் காரணமாக கடல்கள் மற்றும் பனிக்கட்டிகள் அழிந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடல் நீர்மட்டம் உயர்வடைந்து வருவடைவதுடன், பனிக்கட்டிகள் உருகி வருவதாகவும் ஐ.நா. ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

மனித செயற்பாடுகளால் சில உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதாகவும் ஐ.நா. ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உறைந்த நிலப்பரப்புகள் அழிவது, மேலும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கரியமில வாயு வெளியேற்றத்தை உடனே குறைப்பதன் மூலம் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்