இலங்கை தேயிலையை ரஷ்யாவில் பிரபலப்படுத்தும் திட்டம்

இலங்கை தேயிலையை ரஷ்யாவில் பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம்

by Staff Writer 26-09-2019 | 8:11 AM
Colombo (News 1st) இலங்கையின் தேயிலையை ரஷ்யாவில் பிரபலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரஷ்யாவைத் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இலங்கை தேயிலையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Ceylon Tea நாமத்தை மேலும் சர்வதேச சமூகத்திற்கு அறிமுகம் செய்வது இதன் நோக்கமாகும் என இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது.