இலங்கை – இந்தியா இடையிலான T20 போட்டி அட்டவணை வௌியீடு

இலங்கை – இந்தியா இடையிலான T20 போட்டி அட்டவணை வௌியீடு

இலங்கை – இந்தியா இடையிலான T20 போட்டி அட்டவணை வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

26 Sep, 2019 | 5:11 pm

Colombo (News 1st) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை BCCI வௌியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி மாதத்தில் சிம்பாப்வே அணியுடன் விளையாடவிருந்த நிலையில், சிம்பாப்வே அணியின் சர்வதேச அங்கீகாரத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை இரத்து செய்தது. இதனால், சிம்பாப்வேக்கு பதிலாக இலங்கை அணியுடன் விளையாடும் தீர்மானம் எட்டப்பட்டது.

இலங்கை அணியும் இந்தியா சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டி கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் போட்டி ஜனவரி 5 ஆம் திகதி கவுகாத்தியிலும், 2 ஆவது போட்டி ஜனவரி 7 ஆம் திகதி இந்தூரிலும், 3 ஆவது போட்டி ஜனவரி 10 ஆம் திகதி புனேவிலும் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்