ஆசிரியர், அதிபர்கள் ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி மூடப்பட்டது

ஆசிரியர், அதிபர்கள் ஆர்ப்பாட்டம்; லோட்டஸ் வீதி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2019 | 1:14 pm

Colombo (News 1st) ஆசிரியர் – அதிபர்கள் இணைந்து கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லோட்டஸ் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுவழிகளில் பயணிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர்கள் ஆரம்பித்துள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ​சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினால் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளிலிருந்தும் விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்