கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

மட்டக்களப்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

by Staff Writer 25-09-2019 | 7:44 PM
Colombo (News 1st) மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போது, அதில் பயணித்த மூவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கள்ளியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி, 10 துப்பாக்கி ரவைகள், ஆயுதங்கள், கையடக்க தொலைபேசிகள், வீடுகளை உடைப்பதற்கான பொருட்களுடன் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.