மத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி

மத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி

மத்துகமயில் அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பேரணி

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 7:08 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் பேரணி களுத்துறை மாவட்டத்தின் மத்துகமவில் நடைபெறவுள்ளது.

மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (25) பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

‘சஜித் வருகின்றார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் செயற்திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. களுத்துறை – மத்துகம பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் பாரிய பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. 30 000 இற்கும் அதிகமான ஆதரவாளர்கள் வருகை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாட்டிலுள்ள ஏழைகள், வேதனையில் உள்ள மத்தியதர வர்க்கத்தினர், குரலற்ற மக்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்காக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் செயற்றிட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடுவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்

என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்