தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: ஐவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: ஐவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 3:45 pm

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ – பத்தேகம பகுதிகளுக்கு இடையில் காரொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதுடன், அவர்கள் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்