தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: ஐவர் காயம்

by Staff Writer 25-09-2019 | 3:45 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ - பத்தேகம பகுதிகளுக்கு இடையில் காரொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதுடன், அவர்கள் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.