கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஆயுதங்களுடன் கைது

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஆயுதங்களுடன் கைது

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஆயுதங்களுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 2:04 pm

Colombo (News 1st) மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பங்களுடன் தொடர்புடைய ஐவர், ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – பார் வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது, அதில் பயணித்த மூவரை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கள்ளியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத்தூப்பாக்கி, 10 துப்பாக்கி ரவைகள், ஆயுதங்கள், கையடக்கத் தொலைபேசிகள், வீடுகளை உடைப்பதற்கான பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்று ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்