ஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்க்கும் திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்க்கும் திஸ்ஸ அத்தநாயக்க

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 9:37 pm

Colombo (News 1st) நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தம்முடன் இணையுமாறு கட்சியில் இருந்து விலகிய அனைவரிடமும் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோள், கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் கைகோர்ப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தில் அதனை முன்னெடுக்காமையே கட்சியில் இருந்து விலகி செயற்படுவதற்கு காரணமாக அமைந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் வேட்பாளர் ஒருவரை பெயரிட்டு கட்சியை வெற்றியடையச் செய்யும் தனது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் இந்த சந்தர்ப்பத்தில், சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் கைகோர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்