by Staff Writer 25-09-2019 | 9:30 AM
Colombo (News 1st) தம்புள்ளை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் தாக்கியதில் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரணதரத்தில் கற்கும் மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வேறு சில மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால், அவர்களுக்குத் தண்டனை வழங்கும் வகையில் ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இதுவரை கைது செய்யப்படவில்லை.