நாட்டின் பல பகுதிகளில் 200 mm வரையிலான மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி

by Chandrasekaram Chandravadani 24-09-2019 | 6:52 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (23) காலை 8.30 மணி முதல் இன்று (24) அதிகாலை 3.30 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டுநாயக்கவில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 219 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், காலி - வந்துரம்ப பகுதியில் 175 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் காலி - ஹியாரே பகுதியில் 172 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.