மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

பொத்தல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

by Staff Writer 24-09-2019 | 11:04 AM
Colombo (News 1st) பொத்தல, அமுகொட பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். சிறுமியொருவரும் 2 பெண்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், வீடு மற்றும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.