சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம்

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம்

சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 9:34 pm

Colombo (News 1st) சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக
பொது சேவை ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று மாலை அறிவிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறினார்.

அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதன் ஊடாக, தொழில் தர்மத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸிற்கு எதிராக முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய, சொலிசிட்டர் ஜெனரலாக அவர் இதுவரையில் மேற்கொண்ட கடமைகளை முன்னெடுப்பதற்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்னவை சட்ட மா அதிபர் தற்காலிகமாக நியமித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்