கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கின

கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கின

கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கின

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 8:15 am

Colombo (News 1st) பலத்த மழையினால் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டி சந்தி, புளூமெண்டல் ஜோர்ஜ் ஆர் டி சில்வா சந்தி, ஜேத்தவன வீதி, பேஸ்லைன் வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி மற்றும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், அப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, பலத்த மழையால் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மழை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்