இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 3:20 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 400 கிலோகிராம் நிறையுடைய பால்மா பக்கெட்டின் விலை 20 ரூபாவினாலும் 1 கிலோகிராம் பக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பால் மாவிற்கு காணப்படும் விலைக்கு அமைய, விலை சூத்திரத்தினூடாக பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவு குழுவின் பரிந்துரைக்கு அமைய, பால் மா விலையை அதிகரிக்க அனுமதி வழங்கியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்