எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு

எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு

by Fazlullah Mubarak 23-09-2019 | 9:26 AM

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக் காய்ச்சலால் 3317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனவரி, மார்ச், மற்றும் ஜூன் மாதங்களிலும் அதிகமானோர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும் காலியில் 321 பேரும் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்