இஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவ தளபதி பரிந்துரை

இஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவத் தளபதியின் பெயர் பரிந்துரை

by Staff Writer 23-09-2019 | 4:03 PM
Colombo (News 1st) இஸ்ரேலின் பிரதமராக முன்னாள் இராணுவத்தளபதி பென்னி கன்ட்ஸ் (Benny Gantz) பதவியேற்க வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். கடந்த வாரம் இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பதவியிலிருந்த பிரதமர் நெதன்யாஹு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி கன்ட்ஸிற்கு இடையில் மிகக்குறுகிய வித்தியாசமே நிலவியது. இந்தநிலையில் இரு தலைவர்களும் கூட்டணி அரசமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் மூன்றாமிடத்தை அடைந்த அரபுக்கட்சிகள், நெதன்யாஹுவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளன. முன்னாள் இராணுவத்தளபதி பென்னி கன்ட்ஸை புதிய பிரதமராக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அரபுக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.