கவனயீர்ப்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்

கவனயீர்ப்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

23 Sep, 2019 | 11:33 am

Colombo (News 1st) வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (23) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற கவனயீர்ப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக வேலைவாய்ப்புகள் இன்றி உள்ளதாகவும் வாக்குறுதிகளை நம்பி தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கவனயீர்ப்பில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள், மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்