மாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

மாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

மாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

எழுத்தாளர் Fazlullah Mubarak

23 Sep, 2019 | 9:12 am

Colombo (News 1st) மாத்தறையில் நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன

மாத்தறை – அக்குரஸ்ஸை, அதுரலிய, கத்துவ, ரஜகல்கொட உள்ளிட்ட இடங்கள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ளன.

நில்வளா கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அப்பகுதியில் மழை பெய்து வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்